இழையோடிய காதல் இன்னமும்
புரையோடிய துரோகத்தை புணரமைக்க வேண்டி....
மறதி மாமருந்து
இறுதி வரை வாதையின் வலி இதயத்தினிடையே
தேன் தடவிய வார்த்தைகளில் விடத் தன்மை.. அமிலம் உண்மை
அன்பை அடகு வைத்து ஆதாயம் தேடியவளே மீட்டெடுக்காமல் மூழ்கியது
காசுக்காக படுக்கும் தாசியும் கூட வார்த்தை தவறுவதில்லை
காதலை விடுத்த நீ எப்படி..?
கன்னங்கள் சிவந்தது
விழிகள் விளக்காக சிவப்பு விளக்கில் சிக்கிய விட்டில் பூச்சி
வெட்கமும் வேடமாக வெட்கித் தலை குனிந்தேன் ...
நினைத்து உருகுகிறாய் என்று ரசித்தேன் நினைத்ததை உருவுகிறாய் என்று அறிந்தேன்
காசை முன்னிறுத்தி காதலை காவு கொடுத்தவளே
மாசற்ற தாய்மையையும்
மாசு படுத்தியவளே
மானமிழந்து போனாலும் மணம் இழக்காமல்... குலம் குன்றினாலும் வளம் குன்றாமல்
மண்ணுக்கான சாபக்கேடு
மரணம் வரை நீ படும்பாடு...
மானமற்று நீ உறவாடு...
மனமாற்றம் உன் நிலைப்பாடு...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114