இரையானது தமிழ் இனம்....
பெரும்பான்மை நிரூபிக்க நினைத்து தடுமாறிய மனப்பான்மை
கூட்டத்தைக் கூட்டிய கூத்தாடி ஆட்டத்தை கலைத்தது யாரது ஆத்தாடி...?
களமாடத் தெரியாதவன் கையும் களவுமாக அகப்பட்டான்
ஒப்பனை கலையும் என ஊர் போய் சேர்ந்து விட்டான்
உறவாடி கெடுப்பதில் ஒன்றாம் இடத்தில்
கெடுத்தவர்கள் இனி இரண்டாம் இடத்தில்...
ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும்
மட்டுமல்ல இவர்கள் புகுந்த வீடும் இல்லாது போகும்..
எதிரணிக்கும் தகுதியற்ற போனது இன்று வரை ஆவணப்படி எதிர்த்து நிற்கும் அணி
சட்டம் ஒழுங்கு சரியில்லை சத்தம் போடும்.. ஆளுநர் வகையில் ஆளுமை காணும்....
தேர்தல் நேரம் போர்க்களமாகும்.. தேடிவந்து பூக்களை வார்க்கும்...
ஓடி வந்து உதவிகள் செய்யும்
உபகாரமாய் ஓட்டு கேட்டு உய்யும்
அரிதாரம் பூசியவன் அடங்கிப் போவான்... ஆதரவு தந்தவன் அதிகாரம் செய்வான்..
கனவு தொழிற்சாலையின் கதாநாயகன்... கனவுலகில் மிதக்கின்றான்.. கண்மூடி திறக்கும் நொடியில் காணாது போகின்றான்
பார்க்க வந்த கூட்டமிது
பார்த்ததும் விடும் ஓட்டமிது
தானா சேர்ந்த கூட்டமிது
வீணா போன நாட்டமிது
படம் முடிஞ்சதும் கூட்டம் கலையும்
பார்த்த கதைய பேசி திரியும்
வேலை வெட்டிய பார்க்க போகும்
உழைச்சா சோறு உண்மை ஆகும்
இவண்
ஆற்காடு குமரன்
9789814114