ஒத்திகை பார்க்கிறேன் நான் என்றாவது உன்னால் ஒதுக்கி வைப்பாய் நீ எனவே....
தாம்பத்தியத்திற்கே தகாத வழியில் ஒத்திகை பார்க்கிறது இன்றைய தலைமுறை
நான் தனிமையை தானே ஒத்திகை பார்க்கிறேன்.. இனிமையான உன் நினைவுகளின் துணையோடு
உன் நினைவுச் சிறையில் அடைபட்டு கிடக்கும் நிலை வரலாம்...
விடுதலையாவது எப்படி மறக்க மகிழ்கிறேன்... பிடிமானம் கொண்டு விட்டால் பிணை கைதியாக வேண்டும் போலும்....
அபிமானம் கொண்டு விட்டால் நேரும் அவமானம் கூட வெகுமானமாய் தோன்றும் போலும்
வீதியில் தான் நம் விழிகள் சந்தித்துக் கொண்டன... விதி ஆரம்பித்த புள்ளியிலே இறுதியில் வீதியில் நான்....
விழிகள் சந்தித்தவுடன் வெட்கத்தில் கன்னம் சிவந்தது... மொழிகள் பரிமாற துவங்கி முத்தத்தில் முடிந்தது
காணாதபோது கண்கள் கலங்கின கடுஞ்சொல் வீசுகையில் உள்ளம் நொறுங்கின.
சோகமான காதல் நினைவுகள் சுகபோகமாக எனக்குள்ளே...
எப்படியோ வந்தாய் நின்றாய் கொன்றாய் தின்றாய் சென்றாய்
உன் எச்சத்தின் மிச்சமாகவே உன் வாசத்தோடே... மாறாத நேசத்தோடு
மரணிக்க மனம் வரவில்லை
இன்னமும் துடித்துக் கொண்டிருக்கிறது என் இதயம் உன்னை சுமந்தபடி...
மூச்சடக்கி அசைவற்று கிடக்க முயல்கிறேன் மரணத்திற்கான ஒத்திகையாக....
இதயம் வெடித்து விட்டால் இனியவள் நீ வெளியேறி விடுவாய் என்ற பயத்தில் இயல்பாகவே உனக்காகவே
நான்.... நீயாகவே...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114