பள்ளிக்கல்வி கட்டணத்தில் பல்லிளித்து கொண்டிருக்கிறது பாமரன் வாழ்க்கை இவனுக்கு தேர்தல் கொண்டாட்டம்
பிள்ளையின் கல்வி கட்டணம் பெற்றோர்கள் பிணை கைதி
கல்வி நிறுவனங்கள் சிறைபிடித்த கருப்பு பணங்கள்...
தேர்தல் வாக்குறுதியில் எந்த தே(ச) மகனும்... கல்வியை பொதுவுடமை ஆக்க நினைப்பதில்லை....
நதிநீர் இணைப்பை விட்டு விட்டான் கடலை சுத்தப்படுத்த துவங்கி விட்டான்....
நிர்வகிக்க முடியவில்லை என்று பல துறைகளை விட்டு விடும் இந்த அரசியல்வாதி தான் பதவியை விட்டு விடலாமே....
இவன வச்சு நம்மளால குப்பை கொட்ட முடியல இவனையே குப்பையா கொட்டிடுவோமே....
நல்ல சோறு தின்ன முடியல நாளு கிழமை பார்க்க முடியல நாலு இடம் போக முடியல...
தேர்வு பற்றி பயம் இல்லை தேர்தலைப் பற்றி அறிவும் இல்லை... சென்ற ஆண்டு கல்வி கட்டணம் வரும் ஆண்டு கல்வி கட்டணும்.....
கல்வியும் மருத்துவமனை இலவசமாக கொடுங்கடா போதும்..கட்டாயம் கடன் இல்லாமல் தமிழ்நாடு ஆகும்....
நாடாளும் எவனுக்கும் நல்ல எண்ணம் இல்ல... நாட்டாமை பண்றதுக்கு எவனும் இங்க நல்லவனும் இல்ல...
அவனவனுக்கு அவன் பிரச்சனை பெத்தவங்களுக்கு பண பிரச்சனை
சிந்திக்காத வரைக்கும் தினம் பிரச்சனை....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114