மரணமும் மதிப்பு வாய்ந்தது மண்டியிட்டவுடன் கிடைத்துவிடாது....
சுயவிடுதலை விலைமதிப்பற்றது விலை கொடுத்தால் கிடைக்காது...
நிம்மதி புறத்தில் இல்லாதது உணரும் வரை அகத்தில் அடவாதது
ஆண்டவா என்ன சீக்கிரமா கூட்டிட்டு போ... வந்து நின்னா அவகாசம் கேட்பான்.....
நம்மில் எழும் உணர்வுகள் யாவும் விலைமதிப்பற்றது... உணராத வரை தீங்கினை விளைவிப்பது...
கண்ணுக்கு தெரியாத உயிர் தான் நம்மை கட்டி மேய்கிறது... விட்டு உதறும் நேரம் உடல் கெட்டுப் போகிறது.....
பதப்படுத்தப்படும் அந்த உடல் வாழும் போது பக்குவப் படுவதே இல்லை உணர்வின் கொந்தளிப்பில் உருக்குலைந்து தேய்கிறது....
எல்லாவற்றையும் நாம் அடக்க கற்றுக் கொண்டால் நமது அக வாழ்வு தொடக்கம் ஆகிறது....
கொந்தளிப்பு இல்லாத ஆழ் கடலில் தான் முத்துக்கள் அடங்கி கிடக்கிறது
அலைகள் ஓய்வதில்லை ஆயினும் எந்த பயனும் இல்லை....
ஆய்ந்து அறிந்து நமக்குள் நாமே ஒரு குடிலை வேய்ந்து அடவிக்கிடப்போம் கிரகித்துக் கொள்ளும் யாவும் நம்மை உருவகித்து விடும்...
அடுத்தவன் வயிரை பார்ப்பவன் அரை வயிறு உண்பான்... அடுத்தவன் இலையை பார்ப்பவன் அறுசுவை அறியான்...
நான் நம்மை பார்ப்போம் நமை நாமறிவோம்... நன்மை அடைவோம்
இவண்
ஆற்காடு குமரன்
9789814114