மதுவை விற்கும் அரசே மறுவாழ்வு மையத்தையும் நிறுவியது... அரசின் கொள்கையின் முரண்பாடு....
அடிக்கிற கைதான் அணைக்கும் என்று அன்னைக்கே சொன்னாங்க இன்னைக்கு வரைக்கும் செய்யறாங்க....
படுக்கணும் ஆனா புள்ளைய பெத்துக்க கூடாது கை நிறைய சம்பாதிக்கணும்...கடன் வாங்க கையேந்தனும்....
சந்திக்கு வந்து முந்தியை விரித்து பந்தியில் அமர்ந்த பின்னே முகர்ந்து விட்டு போ என்பதை போல் இருக்கிறது சாராயக்கடையும் அதன் சட்டமும்..... அபராதம்
போதை இல்லாத தமிழகம் உருவாக வாய்ப்பே இல்லை... போதை இல்லாத சரக்கோடு... சாலைகளில்
குளிர்பானம் என்று பெயர் சூட்டினாலும் வியப்பில்லை.... குழவிகளுக்கு புகட்டினாலும்
விற்பனை குறைய வாய்ப்பே இல்லை.....
எப்படிடா இப்படி சொன்னதைச் சொல்லியே... சொப்பனத்தில் ஆழ்த்துகிறாய்...ரொக்கத்தை சேர்த்து சொர்க்கத்தில் நீ வாழ்கிறாய்.....
நதிநீரை இணைத்து விட்டீர்கள் மொழி போராட்டத்தை முடித்து விட்டீர்கள்...
சோதித்ததையெல்லாம் சாதித்ததாக சரித்திரமாக சாதனை விளக்கக் கூட்டம் ....வேறு
புறத்தில் அல்லாத ஒன்றை தேடி அலையும் மனித கூட்டம்... புறம் பேசி நீங்கள் போடும் ஆட்டம்....
ஆசையை தூண்டி விட்டு ஆளான துன்பத்திற்கு ஆசையே காரணம் என்று போதனை செய்வதாக இருக்கிறது......
சிந்திப்பீர் இன்றைய தலைமுறையினரே.. இனியும் சிந்திக்காவிட்டால் சந்தி சிரித்து விடும் நாளைய தலைமுறை....
போதையின் பாதையில் நாளைய வரலாறு.... வாதையின் பிடியில் வளரும் நம் தலைமுறை பாரு......
இவண்
ஆற்காடு குமரன்
9789814114