நேரடி கொள்முதலில் நேர்மை இல்லை... இடைத்தரகன் வந்து கடை விரித்தான்.. தடைபட்டு விலை கூடிப்போனது யாவும் இங்கே...
செயலிகளிடம் சிக்கித் தவிக்கிறோம் செய்வதறியாது.. செயல் இழந்து போகிறோம்....
பட்டதாரிகள் இங்கே பராரியாக... வட்டிக்கு வாங்கி கொட்டிக் கொடுத்த பணம் கொள்ளை போனது எங்கே....
காசை கரி ஆக்குவது கல்வியை தவிர வேறொன்றும் இல்லை... கற்பிக்கும் முறையும் சரியில்லை கற்றிட வழியும் இங்கு இல்லை..
திருமண பத்திரிகையைத் தவிர திரும்ப வேறு எங்கும் பயன்படுத்த முடியாத பட்ட படிப்புகள்.., செல்லா காசாகி போனது பொல்லாத கல்வி
கல்வியை கடவுள் என்ற காலம் போய் காசே தான் கடவுள் என்று ஆனதடா....
அடிப்படை கல்வி போதாதா அடிமையாய் பிழைப்பை ஓட்ட....
எடுப்பு சாப்பாடு எடுத்துக்கொண்டு அலையும் எத்தனை இளைஞர்கள் இங்கு...
கல்விக்கும் வேலைக்கும் சம்பந்தமில்லை பிறகு கல்வி எதற்கு....
கல்வி அறிவு அவசியம் தான் களவு போகாமல் இருக்க..கற்ற கல்வி களவாடப்படுவதே இல்லை கடைசிவரை...
ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பது எந்த அளவு உண்மை... போட்டு உடைக்கிறேன் இன்று
தகுதிக்கு ஏற்ற பணி கிடைக்காமல் தறி கெட்டு திரிகிறது இன்றைய தலைமுறை....
அடிப்படைக் கல்வி அறிவு கூட இல்லாதவன் இங்கு அரசியல்வாதி.... அடிப்படை கல்வி பயின்றவன் தொழிலதிபர்...
அரசாங்க பள்ளிகளில் பயின்றவன் அதிகாரிகளாக....தனியார் பள்ளியில் பயின்றவன் யாவரும் தனியார் துறைக்கு அடிமைகளாக....
கற்றும் விளங்காமல் பற்றும் விலகாமல்..பணம் படைத்தவனுக்கு சேவகனாக... பட்டதாரிகள் .....
முற்றும் தொடக்கமும் முடியவில்லை மூலையில் முடங்கவும் முடியவில்லை
மூளையும் சிந்திக்க மறுக்கிறது
நாளை கேள்விக்குறி புரிகிறது.....
அறிவை வளர்க்க கல்வி பயிலுங்கள் அறியாமையை போக்க கல்வி பயிலுங்கள்... பிறருக்கு அறிவிக்க கல்வி பயிலுங்கள்....
பெற்ற செல்வமும் இல்லாத போகும்
கற்ற கல்வி நிலையே ஆகும்.. பிறருக்கு கற்பிக்காத கல்வி கல்லறையே சேரும்...
சிந்திப்போம் இனியாவது.... பதறி சிதறி போகாமல் கதறி சாகாமல் கருத்தில் கொள்வோம்... அடிப்படைக் கல்வியின் அவசியத்தை மட்டும்...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114