அலையென ஆடும் உன் கூந்தலின் மணம் வலையென வீசும் தினம்
நிலை என நானும் முகர்கிறேன் சிலை என நானும் நிலைக்கிறேன்
கலை என உன் வளைவினை ரசிக்கிறேன் கரும்பென உன் வனப்பினை சுவைக்கிறேன்
உள்ளிழுத்த உன் வாசம் வெளிவிட மனம் இல்லை... மூச்சடைக்கிறேன் மூச்சையாகிறேன்...
சிப்பிக்குள் முத்தெனவே என் இமைக்குள்ளே நீ...
மயக்கும் நீ மயக்கத்தில் நான்
கிளர்ச்சியாய் நீ கிரக்கத்தில் நான்
யாக்கை ஈர்க்கிறது என் போக்கை மாற்றிடவே... இலக்கு நீ என்றே இயங்குகிறேன் நானன்றோ....
உன் பாதங்கள் வரைந்த ஓவியத்தை பார்த்து ரசித்தபடி பயணிக்கிறேன் நான்.....
பூவுடன் சேர்ந்த நாரும் மணப்பதை போல பூவையுன்னுடன் நான்...
மொழியினை உணர்த்தின உன் இரு விழிகளும் இதழ்களும்.....
அழகினை உணர்த்தின உன் அகமும் புறமும்... அன்பினை உணர்த்தின உன் அருகாமையும் நினைவும்....
என்னையே எனக்கு உணர்த்தின உனது உறவும் பிரிவும்...
உன்னை சந்திக்காமல் இருந்திருந்தால் நான் சிந்திக்காமல் இறந்திருப்பேன்...
உன்னை சிந்திக்காமல் இருந்திருந்தால் கண்ணீர் சிந்தாமலே கடந்திருப்பேன்....
உன்னை காணாமலே இருந்திருந்தால் என்னை தேடாமலே எனக்குள் நிலைத்திருப்பேன்....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114