அழைப்புக்கு செவிமடுக்க கற்றுக் கொள்ளுங்கள்..ஆருயிரும் அலைபேசிக்குள் அலைபாய்ந்தபடி
அகால நேரத்தில் அழைப்பு வந்தாலும் அழைக்காத உறவு அழைத்தாலும் அடிவயிற்றில் பயம் பிறக்கிறது
நல்லது நினைக்கலாமில்ல.. உள்ளதே நிலை இல்லன்னு தெரிஞ்ச பிறகு எப்படி நல்லது நினைக்க தோணும்
தவறிய அழைப்புகளுக்கும் தவறாமல் அழைத்து விடுங்கள் எப்போது யார் தவறி போவார் யாருக்கும் தெரியாது....
தேடல்களை நோக்கிய ஓட்டத்தில் சிதறி தொலைந்து போகும் பல உறவுகள்....
என் அலைபேசியின் நட்பு வட்ட புத்தகத்தை புரட்டிப் பார்க்கிறேன்
பயன்படுத்தப்படாத பல எண்ணங்கள்...ஒதுக்கப்பட்ட உறவுகள் முகவரிகளாக
மறந்தால் துறந்து விட்ட பல நட்புகள் இறந்துவிட்ட நிலையில்...
அடிக்கடி புரட்டிப் பாருங்கள் புத்துணர்வு கிடைக்கும்... அவ்வப்போது அழைத்துப் பாருங்கள் உறவு தழைக்க கூடும்...
நினைவுகள் மட்டும் தான் நிழல் என துணை வரும்... நிகழ்வுகள் விதையாமல் நினைவுகள் விளைவது இல்லை....
கடை வழி பயணத்திற்கு யாரும் துணை வருவதில்லை... கடந்து போகும் தூரத்தில் ஆவது கைகோர்த்து நடந்திடுங்கள்..,
பாதங்களை அழுந்த பதிந்து திடமாக நடப்பதை போல... ஆதாயம் தேடாமல் ஆவலுடன் உரையாடுங்கள்....
அறத்துடன் கூடிய அன்பை பகிர்வது நல்ல பண்பு.. அடிமையாகாமல் அடிமையாக்காமல் எளிமையாய் தொடர்வது நல்ல நட்பு....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114