ஒற்றை விரல் வித்தை காட்டும்
ஏனென வினவ வினாக்குறி ஆகும்..
சங்கிலி தொடரென சங்கமிக்க கூடும்
குத்தி கிழிக்க ஈட்டியென பாயும்
எச்சரிக்கும் போது நிமிர்ந்து நிற்கும்
குறை உணர்த்த நீட்டி முழக்கும்...
குறை உணர தலை தாழலாகும்
வீறு கொண்டெழ நாட்டை ஆளும்
வீணான விரல் விரையம் நாளும்.
இவண்
ஆற்காடு குமரன்
9789814114