வாகனம் ஓட்டுகையிலும் ஓரமாய் நின்று ஒலிப்பேழையில் கவிதை எழுதிக் கொண்டிருக்கும்
என்னை உற்று நோக்கும் யாவரும் கள்ளக்காதலியுடன் கதைத்துக் கொண்டிருப்பதாய் கணிப்பு..
தன்னை ப் போல பிறரும் எனும் எண்ணம் என்னை தவிர யாவருக்கும்...
கருத்துக்கணிப்பு உரைப்பதிலும் கண் மூக்கு காது இட்டு கதைப்பதிலும் நம்மவர்களுக்கு நிகர் வேறு எவரும் இல்லை....
உருவாகிறானோ இல்லையோ உருவகப்படுத்துவதில் ஒப்புமை இல்லை இவர்களுக்கு....
தனக்கு பிடித்ததை தான் நினைத்ததை செய்யும் எவரையும் தள்ளி இருந்து காணும் யாவரும் பைத்தியம் எனவே காண்பர்...
மாறுபட்டிருக்கும் இவர்களின் பார்வை எந்த மர மண்டைக்கும் உரைப்பதில்லை... படைப்பாளிக்கு அதைப் பற்றிய கவலையும் இல்லை
அடுத்தவனை பார்த்து உங்கள் அங்கலாய்த்துக் கொள்வதும்...அடுத்தவனை பரிகசித்து பழிப்பதும்
இழிவென உணராத வரை நல்வழி பிறப்பதில்லை... எவனும் நற்கதி அடைவதில்லை...
தன்னைப் போலவே பிறரும் என்ற நல்ல எண்ணம் எல்லா நிகழ்விலும் இருக்க வேண்டும்....
சாதகமான நேரத்தில் தான் என்பதும்பாதகமான நிகழ்வில் நீ என்பதும்..தீதகம் கொள நிலையன்றோ...
என்னை பற்றி எவன் என நினைத்தால் எனக்கு என்ன நானே என்னை மறந்த நிலையில்... என்னையே துறந்த நிலையில்....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114