பிறப்பித்தவர் காலை தவிர பிறர் காலில் விழுபவர் தன் சுயமரியாதையை விற்றவராகிறார்
காரியம் சாதிக்க காலில் விழுபவன் உன் ஈம காரியத்திற்கே முன் நிற்பான்...
அழுவது தொழுவது விழுவது யாவும் காரியம் சாதிக்க தானே...
எழுவது ஒன்றே வீரியமென்பேன்.
புதைத்திடும் விதைகள் முளைத்திடவே தான் கண்டேன்...
காலில் விழும் கலாச்சாரம்
கட்சி தலைமையின் விபச்சாரம்
தொண்டர்கள் யாவரும் அரிதாரம் கலைய சிதைந்து போகும் அடி வாரம்
.
மனிதனை தீண்டினா அபச்சாரம்
மதங்களின் வழியே வியாபாரம்
காசு ஒன்று தான் ஆதாரம்...
காணாமல் போகையிலே சேதாரம்
குனிய வச்சு குத்துறான் புரியாம கும்பிட்டு சுத்துறான்.. கூட்டி கொடுத்து விக்கிறான்.. கூட இருந்தே கெடுக்கிறான்....
உச்சியிலே மூளை வச்சான்..
ஓட்டுக்குள்ள மறச்சு வச்சான்
சிந்திக்க தான் மதியை வச்சான்
சிரசுன்னு பேரை வச்சான்....
ஆறறிவு உனக்கு வச்சான் ஆற்றலையும் உனக்குள் வெச்சான்
ஆந்தறியும் திறனும் வெச்சான்
அடிமை இல்லடா எழுந்திரு மச்சான்..
இவண்
ஆற்காடு குமரன்
9789814114