எழுத்துக்கள் எத்தனை என்பது பெருமை இல்லை எண்ணங்கள் என்ன என்பதிலே வளமை கொள்ளுங்கள்...
என் தாய்மொழி எழுத்துக்களில் இருந்து பிறந்தவை தான் மற்ற மொழிகள் எழுத்துக்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்...
247 எழுத்துக்களை கரைத்துக் குடித்தவன் நீ ...அதற்குள் அடங்கிய எழுத்துக்களை கற்பதில் பிழை என்ன
உயிரும் மெய்யும் கலந்த மொழி என தம்பட்டம் அடிக்கிறோம் உரிமை என்ன என்பதை தவற விடுகிறோம்
மென்மையும் தொன்மையும் வாய்ந்த மொழியாக இருக்கலாம் அண்மையில் மொழியின் நிலை என்ன....
பிறப்புக்கு ஒரு மொழி
பிழைப்புக்கு ஒரு மொழி
பினாத்துவது ஒரு மொழி
பிணமான பின்னே பிறப்பின் மொழி
தற்பெருமை அடித்துக் கொள்வதை விட பெருங்கொடுமை வேறு ஏதும் இல்லை...
தாய் நாட்டிலேயே நாம் தமிழர் என்று
நாமே பரப்புரை செய்கிறோம்.. ஏன் இந்த அலப்பறை
யாரிடம் உரைக்கிறோம்
யாருக்காக உரைக்கிறோம்...
உரைப்பவனுக்கும் உறைக்காது செவி சாய்த்தாலும் விளங்காது...
அதிக எழுத்துக்கள் அவதரித்த எழுத்துக்கள் தானே மற்ற மொழி
எழுத்துக்கள்....
பரிவார்த்தனைக்கு தானே மொழிகள் யாவும்... பரிகாசம் எதற்கு பகுத்து பார்ப்பதும் பிணக்கு....
நம்மொழியைக் கொண்டு நம்மையே மூடனாக்கியது ஒரு கூட்டம்... நமது மூடத்தனத்தைக் கொண்டே நம்மை முடமாக்கியது....
நமது சோம்பேறித்தனத்தையே நமக்கான சுதந்திரம் என்றது....
நமது பேராசையையே ஊழல் பேராற்றலாக கொண்டது....
ஒலி படிவம் அற்ற மொழியில்லை
வளி இல்லை வாய் மொழி இல்லை
வழி இல்லை வழி மொழியவில்லை
விளங்கிக் கொள்ளவாவது...பிற மொழி கற்றிடு...
விளக்குவதற்காகவாவது பன்மொழி கற்றிடு....
எந்த மொழியும் இளைத்ததில்லை
தாய் மொழியும் சளைத்ததில்லை
இறப்புக்குப் பின்னும் ஒலிக்கும்
இறவா மொழி நிலைக்கும்....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114