காதல் நோய் பரப்பும் அவள் ஒரு விழி.. காயம் தனை யாற்றும்
மறு விழி...
கடை கண்ணால் தடை செய்யும் என் வழி..விழி அசைவால் விடை கொடுப்பாள் காதல் மொழி....
நோயென்றுரைத்தாயின் மருந்தொன்று
வேண்டுமன்றோ
காயமொன்று உண்டாயின் களிம்பொன்று வேண்டுமென்றோ
மாயமென்றுரைத்தாலும் காதல்.. உணர்வின் உயிரன்றோ...
இமைகளின் நிழலில் இளைப்பாறும்
இருவிழிச்சுடரன்றோ
இமைத் திரை விலக இருளும் இங்கு விலகு மன்றோ
ஒரு விழியை நோய் என்றான் மறுவிழியை மருந்தென்றான் வள்ளுவன்....இரு விழியும் அற்ற அவள் இமைகள் பேசும் மொழி அறிவானா அவன்...
ஒரு விழியை கண்டிப்பென்றேன்
மறு விழியை கருணை என்றேன்
ஒரு விழியில் கனிவை கண்டேன்
மறு விழி கனிந்திட கண்டேன்
நோயும் அல்ல மருந்தும் அல்ல நோக்கி கொள்ள விழியும் அல்ல
ஆயினும் கண்டோம்..கருத்தே
நோய்க்கும் மருந்துக்கும் விழிகள் அல்ல... நூற்ப்பதற்கும் வார்ப்பதற்குமே விழிகள்..
விழிகள் இரண்டு ஆயினும் பார்வை ஒன்று ஆனதே.... பாதங்கள் நான்கு ஆயினும் பயணம் ஒன்றாய் போனதே.....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114