ஒரு விழியை நோய் என்றான் மறு விழியை மருந்தென்றான்...
இவள் இருவிழிகள் பாய் விரிக்க படுத்து உறங்குவது இவன் அன்றோ....
பாயும் படுக்கையுமாக யிவனாக வாயும் வயிறுமாகிப் போகிறாள்....
மாயும் உலகில் மாயாத நோய் அதனை... வேயும் விழிகள் என்பது விந்தையல்லவோ....
வேயும் நோயும் மாயும் வீழும்
விழி நீர் காயம் ஆறும்
மாயம் செய்யும் விழியதுவின்.. சாயம் ஒருநாள் மாய்ந்திடுமே..
பார்வை கூட தேய்ந்திடுமே...
பயணம் கூட ஓய்ந்திடுமே.....
பூ விழுந்தது என் விழிகளிலே பார்வை பறிபோனதடா.....
பூ விழுந்தது வழிகளிலே என் பயணம் முடிந்து போனதடா...
நோயும் அல்ல மருந்தும் அல்ல....
நீயும் நானும் விருந்தென உண்ண
நன்று தீது ஏதுமல்ல
ஒன்றிகலந்திட்ட பின்
இனி யார் என்ன சொல்ல...?
இவண்
ஆற்காடு குமரன்
9789814114