மை பூசிய விழிகள் கூட பொய் பேசி அலையுதடா.....
மை எழுதிய விழிகள் கூட மாயவலை வீசி திரியுதடா.....
விழிகளின் ஜாலம் விடமே நாளும்...
வீரவாள் புருவம் வீத்திடக் கூடும்....
நாணத்தை சிந்திய நங்கையின் விழிகள்
நஞ்சுமிழும். அரவம் ஆனதடா....
வானத்தை நோக்கி விழி வழி ஒளி தனை வீசி...கார் மழையை கண்ணீரென கொணர்ந்ததடா...
மின்னலென ஒளிரும் அவள் கண்களினாலே இதயத்தில் இடி விழுந்ததடா.....
கண் சிமிட்டும் நேரம் கண்ணுற்றவன் கதை முடிந்ததடா...
கூர்வாள் என்றேன் போர்வாள் என்றேன் குத்தி கிழிக்கும்...
தன்னைத் தானே குத்திக் கொண்டு பழிக்கும்...
இரு விழி பார்வையின் பாதை ஒரு வழி என்று ஆனதடா.....
கடை வழி போகும் நேரம் கண்ணிமைக்காமல் போனதடா....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114