வள்ளுவர் காலத்து வஞ்சியர் விழிகளில் வஞ்சம் இல்லை...
நஞ்சும் இல்லை மிஞ்சும் கருணை
விஞ்சும் வீரம் தஞ்சம் இருந்தது..
ஒன்றை நோய் தரும் விழி என்றார்.. மற்றொன்றை நோய் தீர்க்கும் மருந்து என்றார்...
வஞ்சம் நஞ்சம் கலந்த விழிகள் இன்றைய வனிதையர்கள்.....
ஒன்று வஞ்சகம் கொள்ளும் விழி என்பேன்.. மற்றொன்று நஞ்சுரக்கும் விழி என்பேன்...
கடைக்கண் பார்வை உன்னை கடன்காரன் ஆக்கும்.. மறு கண் பார்வை உன்னை மயானம் சேர்க்கும்....
காமுகன் ஆக்கும் ஒரு கண் காரியம் சாதிக்கும் மறு கண்...
வெறித்துப் பார்க்கும் ஒரு கண் வேட்கை கொள்ளும் ஒரு கண்...
ஏக்கப் பார்வை ஒரு கண்... உன்னை தாக்கும் பார்வை மறு கண்...
மயக்கும் பார்வை ஒரு கண் ஆணை இயக்கும் பார்வை ஒரு கண்....
இடுக்கண் வருகையில் துடிக்கும் இரண்டும்.... இடுக்கண் கலையும் வரை நடிக்கும் இரண்டும்....
பார்வை குறையும் வரையில் போதை தானே தரும்... பேதை அவளின் விழிகளின் வழியே வாதை தானே மிகும்.....
காட்சிப் பொருளான கருவிழிகள் யாவும் கண்ணீரே சாட்சியாகும்...
கண்டு விழுந்த காளையர் வாழ்வு வீழ்ச்சியாகும்...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114