ஏன் உன் இருப்பிடத்தை தெரிவிக்கிறாய் என் இதயம் என்று எனக்கு தெரியாதா என்ன....
ஏன் உன் பிறப்பை பற்றி அறிவிக்கிறாய் நீ பிறந்தது எனக்கென புரியாதா..
உன் அசைவுகளை கண்காணிக்கும் அளவுக்கு அசைவம் அல்ல நம் காதல் சைவம்....
உயிர் பலி கொடுக்கும் உறவல்ல
உயிரின் வலியை உணராமல் கொல்ல...
24 மணி நேரமும் சுற்றிக் கொண்டே இருக்கிறது... ஒரே வட்டத்துக்குள் இருந்தாலும்... ஒரு நாளில் இரு முறை மட்டுமே சந்திக்கிறோம்....
கடிகார முட்களை போலத்தான் நாமும்
சிறிய முள் பெரிய முள் நாமாக இருந்தாலும்...
ஓர் உயிராய் கலந்த நம் நாடித்துடிப்பு ஒரே முள்ளில் ஒரே தொனியில்.....
இதழ்கள் அசையாமலே என் இதயத்திற்குள் இருக்கும் உன்னிடம் உரையாடுவது உனக்கும் தெரிந்திருக்கும்..
நீ எங்கிருந்தால் என்ன.. எப்படி இருந்தால் என்ன.. எனக்குள்ளே இருக்கிறாய் அப்படியே.....
ஊரே பார்த்துக் கொண்டிருக்கிறது நம் ஊர்வலத்தை...
நம்மை கணித்தவன் தோற்றுப் போகிறான்
நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தவன்
நேரமில்லை என்று உரைக்கிறான்...
நடப்பது நன்மை என்றே ந(நு)கர்ந்தபடியே நாம்.....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114