சீண்டிக்கொண்டே இருக்கிறாள்
சிணுங்கிக்கொண்டே இருக்கிறாள் என் சீண்டலை தாங்கிக் கொண்டும் இருக்கிறாள்....
வருகைக்கு காத்திருக்கிறாள் வழியனுப்ப காத்திருக்கிறாள் வரவில்லை என்றும் காத்திருக்கிறாள்
இணையாக உறங்குகிறாள்
துணையாக இயங்குகிறாள்
நினையாமல் நானில்லை என் நிழலின்றி அவள் இல்லை....
தலையணையை பகிர்ந்து கொண்டோம்.. கனவுலகில் இணைந்து சென்றோம்...
தனிமை தனை தவிர்த்து வந்தோம்.. இனிமை யதனை ரசித்து நின்றோம்...
தன்னை மறந்து உறங்கும் அவள் என்னை மறந்து போவதில்லை...
நான் துயில் எழும் நேரம் துணை வர மறப்பதில்லை...
என் ஆவி உள்ளவரை அவள் ஆயுள்
நீள வேண்டும்....
அவள் ஆவி தீரும் நாளில் என் ஆயுள் முடிய வேண்டும்.....
ஓரறிவு குறைவாயினும் ஆறறிவைக் காட்டிலும் மிகை அவள் தெளிவு...
ஆறறிவை போல் ஆதாயம் தேடி அலைவதில்லை... அன்பு கொண்டவரை அவமதிப்பதில்லை
நன்றி என்றும் மறப்பதில்லை ஒன்றி கிடக்கும் அவள்.. இன்றிமையாத
இளவரசி... அவளின்றி ஏது எனக்கு வாய்க்கரிசி...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114