ஒவ்வொரு முறை புயல் போல் அவள் கடந்து செல்லும் போதெல்லாம் ஆர்ப்பரிக்கிறது என் மனசு.....
என்னில் புயல் தோன்ற
காரணமே கரையில் பதிந்த காரிகையின் காலடி தடங்கலின் அழுத்தம் தானே....
புதிது புதிதாக புயல் தோன்றி கடந்து செல்கிறது என்னை மட்டும் படாமல் கடந்து செல்வதால் விட்டும் விடாமல் தொடர்கிறேன் நான் மழையாக....
காற்றுக்கும் கடலுக்கும் உள்ள காதல் தான் இந்த புயல் என்று எவருக்கும் புரியவில்லை....
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் என்று வானிலை சொல்கிறது....
வாலிபனின் இதயத்திற்குள் எழுகின்ற காதல் அழுத்தத்தை போல.. எனக்கும் உயிருண்டு என்று ஏன் உணரவில்லை இந்த மானுடம்
கடற்கரையில் கன்னியரை சேர்க்காதீர்கள் அவளின் பாதத்தின்
அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறது என் இதயம்....
என்னைத் தேடி எனக்காக வருகிறாள் என்று எதிர்பார்த்து அலைகிறேன் நான்...
பிறருடன் கைகோர்த்து வருவதை எதிரில் கண்டதும் வேருடன் கொதித்து எழுகிறேன் நான்...
வேதனையில் விழுகிறேன் நான்...
என்னை அவள் தழுவும் போதும் அவளழகில் முழுவதுமாக நழுவி விழுகிறேன் நான்..
காலில் விழுந்து கதறினாலும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்கிறாள்....
கடந்து செல்லும்போதெல்லாம் அழுகிறது வானம் நானும்..
எப்போது அழுதாலும் எதற்காக அழுதாலும் நிறைகிறேன் நானும்...
தென்றலும் அவள் தான்...
வேனலும் அவள் தான்...
குளிரும் அவள் தான்...
புயலும் அவள் தான்....
புலம்புகிறேன் நான்தான்...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114