புலால் உண்பதை தவிர்ப்பது புண்ணியம் என்றால்
அன்று வேட்டையாடி மனிதன் உண்டது வேறு என்ன....?
பரிவாரங்களின் பசியாற்ற பட்சிகள் போதவில்லை பழங்கள் பசியாற்ற வில்லை...
உருவில் பெரிய மிருகத்தை வேட்டையாடினான்..நெருப்பில் சுட்டு உண்டு மகிழ்ந்தான் அன்று தந்தூரி என்று பெயரிடப்படவில்லை.....
கற்கால மனிதனின் கண்டுபிடிப்பை தான் இக்கால மனிதர்கள் பயன்படுத்தி பெயர் மாற்றம் செய்து..
பயிரிட்டு உண்ண சோம்பேறித்தனம் பெயரிட்டு உண்கிறது... இயற்கை பொதுவாக படைத்ததை தானாகிக்கொள்கிறான் அசைவம் சைவம் என்று வகை பிரித்து...
மனிதனை மண் உண்ணும் வரை மனிதன் மண்ணின் மேலே உள்ள உயிர்களை உண்பதில் தவறில்லை......
மாமிசம் உண்பதை தவிர்க்கச் சொல்லும் இந்த மானுடம் கடல் உயிர்களை பற்றி கவலை கொள்வதில்லை...
பசுவின் உதிரம் பால் ஆகிறது அதனை சைவம் என்று சாத்திரம் சொல்கிறது..பசுவின் மூத்திரம் கூட
சாத்திரம் சடங்கில்...
உள்ளிருந்து வரும் இரண்டும் சைவம் என்றால் அந்த உடல் எப்படி அசைவம் ஆகும்....
சைவம் வைணவம்... மதங்களுக்குள் உள்ள உட்பிரிவு... ஒரு பசியாற்றும் உணவுக்குள் எதற்கடா உட்பிரிவு...
கொண்டு போக முடியாததை கொண்டு வாழ கற்றுக்கொள்..உண்டு தீர்க்க கற்றுக்கொள்..எஞ்சியதை கொடுத்து வாழ நன்மை பெற்றுக் கொள்...
உயிர்களைக் கொல்வது பாவம் என்றால்... உயிரற்று ஏதும் இல்லை பிரபஞ்சத்தில்....
கிள்ளும் கீரையிலும் வேர் இருக்கிறது இலை இருக்கிறது கிளை இருக்கிறது
கசக்கிப் பார்த்தால் ஈரம் இருக்கிறது... நுண்ணியல் கருவி கொண்டுணர ரத்த நாளமும் இருக்கிறது...
எது சைவம் எது அசைவம் என்று பிரித்து வைத்த இந்த மனிதன் சைவமா..?.. அசைவமா..?...
நா ருசி அறியும் வரை தான் நளபாகம்...
நாசிக்கு உணர்வு உள்ளவரை தான் நறுமணங்கள்...
நீ உள்ளவரை தான் உனக்கான வாழ்வு
இறைவனின் படைப்பில் எந்த வேறுபாடும் இல்லை
இறைவனால் படைக்கப்பட்ட இந்த மனிதன் இறைவனையே வேறுபடுத்தி பார்க்கிறான்....
செரிமானம் ஆகும் எதை வேண்டுமானாலும் உண்ண பழகு...
சைவம் என்ன அசைவம் என்ன அசையும் வரை எல்லாம் இசையும் உனக்கே...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114