பகிர்வதற்கு முன் பதிவுகளை வாசியுங்கள்.... பலனற்று போகும் உங்கள் பகிர்வு....
உதவும் குணம் உடையவர்கள் தான் நீங்கள்.. உங்களின் உதவி விழலுக்கு இறைத்த நீராக....
காணவில்லை என்ற பதிவை கண்டவுடன் பதறி துடித்து பகிர்கிறீர்கள்...
அந்த முதல் பதிவு எந்த திகதியில் அலசி ஆராயுங்கள்
அடுத்தது ஆவணம் செய்யுங்கள்
நுனிப்புல் மேயும் ஆடுகள் மேய்ந்து கொண்டே தான் இருக்கும்... பசி தீர்வதில்லை....
மேய்ச்சலுக்கு வந்த மாடுகள்.. உன்னை மேய்ந்து பின் அசைவோடும் ஆசுவாசமாக... ஆரோக்கியத்துடன் உலவும்....
பொது தளத்தில் ஆடுகளாக உறவாதீர்கள் பலியாடு ஆகிவிடுவீர்கள்....
மாடுகளைப் போல் இருங்கள் மற்றவர்களுக்கு உதவியாக....
பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்றார்கள்.. தவறினால் உங்கள் பாத்திரம் பிச்சை எடுக்கும்...
இங்கே எச்சை பாத்திரங்கள் தான் பிச்சை எடுக்கின்றன.. பிறரை பிச்சைக்காரனாக்க....
மூன்று வேளையும் தவறாமல் பசி எடுக்கும் எல்லா நேரமும் பிச்சை எடுத்தால் எப்படி ஒரு நேரம் ஆவது உழைத்து உண்ணட்டும்....
இளகிய மனம் இருப்பது தவறே இல்லை ஆனால் இளிச்சவாயன்
ஆகிவிடாதீர்கள்.....
கருணை கொள்பவன் கண்ணீர் சிந்துவது நிச்சயம்... அதில் பலர் கழுவி கடந்து செல்வது நிதர்சனம்...
பறித்து பழித்து
பசியாற முடியும் ருசி அறிய முடியாது... பசித்துப் புசி..ரசித்து ருசி
வருமானம் இல்லாமல் செரிமானம் ஆகாது... பிடிமானம் இல்லாமல் வெகுமானம் வாராது..
உன் உழைப்பின் மூலம் ஒரு பருக்கை உணவை புசித்து பார் அது ருசிக்கும்..
கருணை கொள்வது தவறே இல்லை கல்லின் மீது கருணை கொள்வது தவறு... அது கயவர்கள் கையில் சென்று சேர்வது இயல்பு.....
ஆழ்ந்து வாசியுங்கள் அடுத்தது என்ன யோசியுங்கள்... அகத்தில் உள்ளதை நேசியுங்கள்.. அன்பினை என்றும் சுவாசியுங்கள்...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114