தமிழை தேன் என்று சொல்லாதீர்கள் பல பேருக்கு திகட்டி விடுகிறது இங்கு....
தேன்கூட்டை கலைக்கும் முயற்சியில் தோற்றவர்கள் அதிகம் இங்கு...
அமுதென்று சொல்லாதீர்கள் அளவுக்கு மீறினால் நஞ்சாகி போகிறது பலர் நெஞ்சங்களுக்கு
இசை என்று சொல்லாதீர்கள் ஓலமும் ஒரு வகையில் இசைதான்... ஒலி என்றும் சொல்லாதீர்கள் செவிடருக்கு கேட்காது....
மொழி என்றும் உரைக்காதீர்கள்
ஊமைகளுக்கு புலப்படாது... பிற மொழிகளும் பலம் இழந்து விடும்
ஆதி மூலம் என்று சொல்லுங்கள் ஆவியின் மூலம் என்று சொல்லுங்கள்
உயிர் என்று சொல்லுங்கள் உறை பிணம் உரைப்பதில்லை எதையும்
உயிர் இருக்கும் வரை உணர்வின் வெளிப்பாடு தமிழ்.... அணுக்களையும் அசைத்துப் பார்க்கும் மமதையில் மரபு கொள்ளும் மறையருள் தமிழ்....
ஒப்புமை உலகிலில்லை ஒவ்வாமை எந்த உயிருக்கும் இல்லை... மறுப்பவன் மயிருக்கு சமானம்...
உணர்ந்தவன் உயிருக்கு சமாதானம்..
இவண்
ஆற்காடு குமரன்
9789814114