தவறிய அழைப்பை கண்டும்
அழைக்க தவறி விட்டாய் ..
குறுஞ்செய்திகளை கூட
புறம் தள்ளி விட்டாய்...
அன்பு அகிம்சை யா
இம்சையா... வைத்தவனையே தைக்கிறதே....
அழைப்புகள் யாவையும்
அலட்சியம் செய்தாய்.
எண்கள் இருந்தும் எண்ணங்கள் இல்லாமல் போனதும் ஏனோ
இணையத்தில் இருந்தும்
இணைய மறக்கிறாய்...
புலனத்தில் இருக்கிறாய்
சலனம் அடைகிறேன்....
வலைதளத்தில் இருக்கிறாய்
வலை விரித்து வைக்கிறாய்
க வலைக்குள் சிக்கித் தவிக்கிறேன்....
பாதைகள் ஒன்றாக
பயணங்களும் ஒன்றாக
திசைகள் வெவ்வேறாக..
நினைக்க மறக்கிறாய்
மறக்க நினைக்கிறேன்
நிகழ்வு இணையாக.....
தவிர்ப்பதற்காகவே தவறாமல் எண்ணினை சேமித்து வைக்கிறாய்
தவிப்பினை உணராமல் என்னுள்
இருந்தென்னை தகர்க்கிறாய்...
என்றாவது ஒருநாள் அழைப்பாய் என்ற நம்பிக்கையோடு
அணைக்காமலே அலைபேசியை அணைத்தபடி உன்னை நினைத்தபடி
இவண்
ஆற்காடு குமரன்
9789814114