மாதத் தவணை நெனச்சு பார்த்தா மான ரோசம் விட்டுப் போகும்....
குடும்பச் சுமைய நினைத்து பார்த்தா கூழ கும்பிடு போட கூடும்...
தப்பு சரி அலசிப் பார்த்தா
எதுவும் இங்கு சரியில்ல...
ஏக்குதப்பா பேசிப்புட்டா
எதுவும் நிலைப்பதில்லை
உழைப்பு கேற்ற ஊதியம் கேட்டா
வேலையில் லேன்னு துரத்தும்
உயர் அதிகாரியை முறைச்சுகிட்டா ஊதிய உயர்வு சாபம்...
சொம்பு தூக்கி வேலை பார்த்தா
வம்பு தும்பு இல்ல... போட்டுக் கொடுக்கிற வேலையை பாக்குறவன் பொறுப்பான புள்ள...
தேடி வந்து மதிக்கச் சொல்லும்
கூடி நின்னு மிதிக்க கூடும்
பதவி திமிரு இருக்க கூடும்
பண்பு பணிவு இழக்க லாகும்
எதுவும் இங்கு நிலையும் இல்லை எவனுக்கும் அது புரியவில்லை
கூட குறைய ஊதியம் இருக்கும்
கூட்டி கொடுத்த ஊதியம் பெருகும்
அறிவுக்கு இங்கு வேலை இல்ல அடிமை நிலை மாறுவதில்லை
அதிகார வர்க்கம் நிதம் தொல்லை
ஆறுதல் சம்பளம் போதும் புள்ள..
இவண்
ஆற்காடு குமரன்
9789814114