தேடி வந்து பிச்சை கேட்ட காலம் போய்
நம்மை கூட்டம் சேர்த்து பிச்சை எடுக்கும் காலம் இது.......
வானில் பறந்து நிவாரணம் அளித்தவன் வாசலில் வந்து பிச்சை எடுக்கிறான்......
உரிமைக்காக போராடியது போதும்
நம் உரிமையை நிலைநாட்டுவோம்.....
அரசின் கையெழுத்தை விட
உன் கை நாட்டுக்கு மதிப்பு அதிகம்......
தேர்தல் கமிஷனுக்கு
யார் வேண்டுமானாலும்
அதிகாரியாய் இருக்கலாம்
தேர்ந்தெடுக்கும் அதிகாரம் நம் விரலில்.....
எவனையும் நினைத்து
எவனுக்காகவும்
வாக்களிக்காதே...
உன்னை நினை
உன் பிள்ளைகளை நினை
உருவாகட்டும் நல்லாட்சி....
உருப்படட்டும் அரசாட்சி.....
வாழ்வுக்கு பிச்சை எடுக்கும் கூட்டம் நாம்
வாழ்நாள் முழுவதும் வீதியில்...
வசதிக்கு பிச்சை எடுக்கும் கூட்டம்
வந்து நிற்கிறது நம் வாசலில்...
சிந்தித்து செயல்பட்டால்
சிந்த வேண்டாம் நம் உதிரத்தை....
சந்திப்போம் தேர்தலை
சிந்திப்போம் நம் தேவையை.....
இவண்
ஆற்காடு.க.குமரன்
9789814114