இடைத்தேர்தலுக்கு போட்டியிடுவோர் எத்தனை பேர்.... நீ விடை பெற்று போன பின்னும் விலகாமல் நினைவுகள்....
மை தீட்டிய விழிகள்
எழுப்பிய வினாக்களுக்கு
பொய் பூட்டிய புன்னகை விடையானது.....
பொதுக்கூட்டம் கூடியது உன் பொற்றாமரை பாதங்களைத் தொடர்ந்து....
வாக்குறுதிகள் ஏராளம் வாக்கப்பட்ட உடன் வாக்கரிசியும் அவமானம்....
கரியை பூச பார்க்கும் ஒத்திகை என்று அறியாமல் போனது விரலில் பூசும் போது...
இடைத்தேர்தலில் வழுக்கியவன்
பள்ளத்தில் புதைந்ததே மிச்சம்
உள்ளத்தில் நினைவுகளின் எச்சம்
வாக்களிக்க வயது வேண்டும்
ஒத்திகை பார்க்கிறது பிஞ்சில் பழுக்க
கள்ளத்தனமாக விழும் ஓட்டு ....
இடைத்தேர்தல் பொதுத் தேர்தல் எதுவாக இருந்தால் என்ன கள்ள ஓட்டுக்கு கணக்கே இன்றளவில்...
எத்தனை தாரம் என்று எவனுக்கும் தெரியாது எத்தனை தரம் என்று இவளுக்கும் புரியாது..
தேர்தலுக்கு முன்னே கூட்டணி கட்சி சுயேச்சை... வெற்றிக்கு பின்னே சுயேட்சையும் கூட்டணிக்குள்....
தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன் அங்கலாய்ப்பு அறிவிப்பு வந்தவுடன் ஆராதிப்பு... முடிவினை கண்டு
அவமதிப்பு....முடிவினில் சுதாரிப்பு....
தோற்றவனும் துவளுவதில்லை தொடர்ந்து ரசிக்கிறான் உன்னை...
கையாலாகாதவன் கூட கைப்பற்ற முயல்கிறான்....
வசதி வாய்ப்பை கொண்டு தானே நீயும் வாய்ப்பை தருகிறாய்.
வாய்மைக்கு வழியேது... தூய்மை நிலையாகாது.....
நடைபெறப் போகும் இடைத்தேர்தலை எதிர்நோக்கி நானும்...மடை திறந்த வெள்ளப்பெருக்கோடு ஆண்மை
செருக்கோடே....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114