உண்டி சிருக்கட்டும்
குண்டி சிருக்கட்டும்
மண்டி யிடாதே
அண்டியிராதே
சண்டித்தனம் தவிர்
சுண்டிப் போகும் ஒரு நாள்
சுக துக்கம் எல்லாம்
உழைத்த பணம் என்றால் ஒட்டியிருக்கும் வயிறு
ஊர் பணம் என்றால்
முட்டி நிற்கும் வயிறு
முந்திரியும் பாதாமும்
முழுங்கினாலும்
முக்கி மலம் ஆன பின்
மூக்குக்கு மணம் ஆகுமா.....?
கீரை உண்ணும் பசுவின் மலம்
மங்கலமாய் இருக்கிறது
மருந்தாகவும் இருக்கிறது
கீரை உண்ணும் மனிதனின் மலம்
மனம் ஒப்ப மறுக்கிறது
சுவாசிக்கும் அத்தனைக்கும் அறிவு உண்டு அறிவுள்ள அத்தனைக்கும் உயிரும் உண்டு....
புல் மரம் செடி கொடி ஓரறிவு படைத்தாலும் ஒற்றுமையாய் இருக்கிறது......
ஈரறிவு நத்தையும் சங்கும் அரிய முத்தை சுமக்கிறது.....
மூவறிவு எறும்பும் வரிசையில் நிற்கிறது
மூளையற்ற மனிதனுக்கு முன்சென்று
ஒழுக்கத்தை கற்றுத் தருகிறது
நாலறிவு வண்டும் தேனை சேமிக்கிறது
மலருக்கு மலர் தாவி மகரந்தம்
விதைக்கிறது.......
ஐந்தறிவு விலங்கும் பறவையும்
ஐயமின்றி நன்றியுடன் திரிகிறது....
ஆறறிவு படைத்த மனிதா அத்தனையையும் ஆளத்துடித்தால் பரவாயில்லை....
அழிக்க துடிக்க எண்ணி நீயே
அழிந்து போகிறாய்.....
ஆறறிவு படைத்து என்ன பயன்
ஆணவம் இருக்கையிலே
ஆறறிவு இருந்து என்ன பயன் அகம்பாவம் இருக்கையிலே
அகத்தை சீர்செய் ஏழாம் அறிவு உனக்குள் முளைக்கும்.......
எல்லா அறிவும் உன்னைப் போற்றும்
இயற்கையின் படைப்பில் இத்தனை உயிர்கள்........ செயற்க்கையை படைத்த நீ செத்துப் போகிறாய்......
எல்லா உயிர்களுக்குள்ளும் ஒவ்வொரு தன்மை உண்டு..... எல்லா உயிர்களுக்கும் இல்லாத ஒரு வன்மை உனக்குள் உண்டு
உண்மையை உணர்ந்து நீ
உவகையுடன் வாழ்ந்திடு
உலகையும் ஆண்டிடு
உயிர்கள் உன்னை போற்றும்
உயர்ந்தவன் நீ என பறைசாற்றும்....
இயற்கையோடு இயற்கையாய் வாழு
இருப்பதைக் கொண்டு
இயல்பாய் வாழு
இழக்கும் வரை தான் எல்லாம்....நீ
இருக்கும் வரை தான் எல்லாம்
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114