புகைப்படம் எடுக்கும் போதெல்லாம் புன்னகைக்கிறேன் நான்...... புதைந்து போன பல வலிகளுக்கு நிவாரணம் அது...
அழுகை எப்போதுமே ஆக்கத்துக்கு உதவுவது இல்லை
அழகு எப்போதுமே நிலைத்தும் இருப்பதில்லை.....
புன்னகை மட்டுமே புத்துணர்வை தருகிறது....
என்னை நீ ரசிக்க வேண்டும் என்று அழகு படுத்திக் கொள்கிறேன்....
ரசிக்கும் நொடியில் ஆவது உன்னை நீ மறக்க வேண்டும் என்று நினைக்கிறேன்
உன்னை நினைத்தபடி புகைப்படம் எடுப்பதால் அதை பார்க்கும் போதெல்லாம் உன்னை நீ மறந்து போகிறாய் என்னை நினைத்தபடி
அவரவருக்குள் ஆயிரம் துன்பங்கள் ஆயினும் கடந்து போகும் அடிக்கடி புன்னகைக்கும் போது
அடிக்கடி புகைப்படம் எடுத்தால்
ஆயுள் குறைந்து விடுமாம்
புகைப்பட கருவிக்கா...?
புதையும் என் முகத்திற்கா....?
புகைந்து கிடக்கும் உனது மனதிற்க்கா.....?
அழுகையை யாரும் விரும்புவதில்லை
விரும்பும் அழகும் நிலைப்பதில்லை
அறிவை யாரும் நெருங்குவதில்லை
நெருங்கியவரை அறிவு விடுவதில்லை
அழுகைக்கும் அழிவு உண்டு
அழகுக்கும் அழிவு உண்டு
அறிவுக்கு அழிவே இல்லை
அன்புக்கு இழிவே இல்லை......
புகைப்படம் எடுக்கிறேன் நான்
கண் சிமிட்டியது எனது அலைபேசி
மின்னல் கீற்றாய் உன் முகம்
என்னில் புன்னகை ஊற்றாய் நீ.....
புகைப்படம் எடுக்கிறேன்
என்னில் இழந்தாலும்
உன்னில் பதியும் என் முகம்
மண்ணில் நான் புதைந்தாலும்
மனதில் விதையும்........
மாற்றம் ஒன்றே மாறாதது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்னால்...... மாற்றமே இல்லை என் மரணம் வரை பதிந்த உன் முகம்.....
புகைப்படம் நான் புகையான பின்னும் நிலையாக நிற்கிறது படம் மட்டும்
என் நிழலாக நினைவாக......
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114