உரையாடலை தவிர்த்துவிட்டு ஊமையாக அழுகிறது மனசு........
சிறைப்பட்டு விடுவோமோ என்ற சிந்தையில்......சிறகடித்து பறக்கிறது
சிக்கி விடக்கூடாது என்றுதான் நினைக்கிறேன் ஆனால் என் மனதிற்குள் சிலந்தி வலையில் அல்ல
சிந்தை வலையில் சிக்கிக் கொண்ட உன்னை மீட்டெடுக்கவும் முடியாமல் மீளவும் முடியாமல்......
உரையாடலை தவிர்த்துவிட்டு ஊமையாக அழுகிறது மனசு........ உரையாடினால் உளறி விடக்கூடும் என்று....
கானல் காட்சியாகும் ஆனால் சாட்சியாகாது.....மீட்ச்சியும் இல்லை
சூழ்ச்சியும் இல்லை வீழ்ச்சியும் இல்லை
மனசாட்சி....மனதின் ஆட்சி
தனிமையில் துடிக்கிறது
தன்னிலை இழக்கிறது
முன்னிலை இழந்ததை எண்ணி
கண்ணிமை நனைகிறது.....
நுனிப்புல் மேயும் ஆடுகளைப் போல
மேய்ந்துவிட்டு கடந்துவிடு
வேரோடு உட்கொள்ள நினைத்தால்
கசந்து போக கூடும் எல்லாம்
இதுவும் கடந்து போகும் என்பதே தொடரக்கூடும் அதுவுமே உன்னை கடத்திப் போக கண்ணீரே மிச்சம் ஆகும்
நிலை படுத்து உன்னை நீயே
முறை படுத்து உன்னை நீயே
சிறை படுத்து உன்னை நீயே
நிறையாகும் உந்தன் வாழ்வே
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114