எவர் கண்ணுக்கும் புலப்படாத வரை எதுவும் தவறு இல்லை
இன்றைய சித்தாந்தம்
அப்போது மனசாட்சி ......?
மனம் தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள
சாட்சிகளையே அழிக்கிறது....
ஆட்சியை பிடிக்கிறது
நிலையற்ற மனம் கொண்ட வன்
நிலைகுலைந்து போவான்.....
மனம் ஆசைப்படுவதை மதி சதி என்று உணர்த்துகிறது அதை மிதித்துவிட்டு மனம் கடந்து போகிறது......
தனிமையில் இனிமை காண
மனதால் மட்டுமே முடியும்......
எப்போதும் ஏதாவது ஒன்றை நினைத்துக் கொண்டே இருந்தால் தான்
மதி சுதி இழக்காமல் இருக்கிறது.....
மனம் ஒரு குரங்கு மாறிக்கொண்டே இருக்கும்.... அதன் ஆசைக்கு இணங்க மதியும் பிழன்று போகும்.... மதிப்பை இழந்து போகும்
மனதை அடக்கினால் போதும்
மற்றவை யாவும் மேன்மையாகும்
எதையும் நாம் பார்க்கும் பார்வையைப் பொருத்தே பதிகின்றது மனதில்
என் கவிதைகளை
விதையாக பாரத்தால் விருட்சமாகும்...
கதையாக பார்த்தால் கடந்து போகும்
பார்க்கும் பார்வையை பொறுத்தது தான் எல்லாமே ஆனால்
என் கவிதைகள் நான் பிரசவித்த மழலைகள் என் பார்வையில்
மனதை அடக்க கற்றுக் கொள்
மமதை அடங்கும் தன்னாலே
மதியை தெளிவாக்கு
சதியை பொலி போடு
விதியை நம்பாதே
விதித்தவனை நம்பாதே
துதிப்பவனை நம்பாதே
மிதிப்பவனை நம்பாதே
மதிப்பவனை நம்பி விடு
மதியை நம்பிவிடு
விதிப்படி உன் நடை
தலைவிதி தனை உடை
உனது எனது எதுவும் இல்லை
நமது என்பதே நட்பின் எல்லை......
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே....... அகக் கண்ணைத்
திறந்து விடு.... அறிவாய் உன்னை நீயே
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114