உன் பாத இதழின் பதிவுக்காக......
ஆயுள் முழுதும் பாதயாத்திரை......
அவளோடு......
கைவிரல் காற்றோடு
கால்விரல் என்னோடு....
தேவதை உன்னை சுமந்தே தேய்ந்துபோனேன்.....
கோபத்தில் நான் கடித்தாலும்
சிவக்கும் உன் பாதங்கள்....
உன்னை ஏற்றுக் கொள்ள முரண்டு பிடிக்கும் போது விரல்களால் நீ இழுத்து அணைக்கும் போது உன் இளமை என் தாபம் புரிகிறது
உன் பாத ரேகை பதிவுகளை கேட்டுப் பார் என் தேகச்சூட்டை சொல்லும்.....
வரவிற்காக காத்திருக்கச் சொல்லி...
வாசலில் விட்டு செல்கிறாய்
உன் வாசத்தில் சுவாசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நான்...
நீ எத்தனை பேரை வேண்டுமானாலும் அணைத்துக் கொள்ளலாம்
உன்னையே நினைத்து உன்னையே அனைத்து
உன்னை மட்டுமே சுமந்து உனக்காகவே தேய்ந்து
ஓய்ந்து போனது நான்....
செருப்பென்று யார் என்னை வெறுத்தாலும் என்னை விரும்பியவள் நீதானே.....
கடவுளைக் காண போகும்போது கூட காசு கொடுத்து காப்பகத்தில் விட்டு செல்கிறாய்......
என்னை தொலைத்து விடக்கூடாது என்று.....
உன்னை பிரிய மனம் இல்லை எனக்கு....
தேய்ந்திட இடமில்லை தேகத்தில்........
இப்பிறவியில் உன் வாசத்தில் வாழ்ந்த நான்
உன் சுவாசத்தை சுமந்து கொண்டே.........
நீ வீசினாலும் விசுவாசமாய் இருக்கிறது உன் பாதப் பதிவுகள்...........
என்றும் உன் நினைவுகளுடன்
உன் பழைய செருப்பு....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114