உரசிய காற்று உயிர்த்தெழுந்தது நறுமணமாக ....
சிரிக்கிறது கைவளை...
கைவீசி நீ நடக்க..
குதிகாலின் கும்மாளம்
கொலுசின் கொண்டாட்டம்
மத்தளம் தட்டும் குஞ்சம்.. மயங்கி தருமாறுது நெஞ்சம்....
மயிலிறகு வருடல்
மனதில் நெருடல்.....
மேற்கு மலைத் தொடர்ச்சி
மேதகு இளமை வளர்ச்சி
இலை மறைக்கனி மாராப்பு
பருவத்தின் வார்ப்பு
பிடி இடை பதிவு
பதிந்த வுன் பாதச்சுவடு
துகிலின் அடக்குமுறை
திரட்சி அலப்பறை
முகில் கூட்டம்
எழில் தோற்றம்
காதணி சிணுங்கல்
சிரசிணங்கல்
உதிரும் குறுநகை
உதிர்க்கும் தேன் சுவை
பிரம்மனின் படைப்பு
பிரம்மாண்டம் புடைப்பு
பிழையில்லை விடைப்பு
பிரமிக்க வியப்பு
பிணைய லயிப்பு
பிறப்பிக்கும் உயிர்ப்பு
பிரபஞ்சத்தின் துடிப்பு...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114