மூளை மழுங்கி போனதால் முடிவெடுக்க முடியல
முழக்கத்தான் கண்டு முனைஞ்சா குழப்பம் தானே விளையுது
நடிகன் பின்னாடி போனா
நாடு நாசமா ஆகுது
விளக்கொளி வித்தைக்கான விபச்சாரமும் தோணுது
சினிமாக்காரன் வளர்த்த கட்சி
சின்னா பின்னம் ஆனது
பெரியவாள் சேர்ந்த கட்சி பிரிவினை தானே விதைக்குது
சாதிக் கட்சிகள் சாதனை
ஆணவக் கொலை என்றானது...
உதிரி கட்சிகள் யாவுமே
ஒத்து தானே ஊதுது...
நெருப்பில்லாமல் புகையாதுன்னு நெறைய பேரு சொன்னாங்க
ஊதி ஊதி தீ மூட்டி ஊடகம் குளிர் காய கண்டேங்க...
ஊழலற்ற ஆளுமை நாட்டுக்குள்ள
இல்லையே.....
குடியை விற்று சன்மானம் பெறுவதும் இங்கு அவமானம்
உரிமைத் தொகை வெகுமானம் அடிமை நீயே உவமானம்
கூட்டத்தை காட்டியே கொடி நாட்ட பார்க்குறாங்க
கோமணத்த உருவி கொடியாக கட்டுறாங்க....
நிர்வாணமா திரியுறோம் நிவாரணத்தை தேடுறோம்
ஆட்டு மந்தை ஆகிறோம்
அறுபடுகையில் வாடுறோம்
ஓட்டை விற்று பழகினோம்
நாட்டை விற்க பழக்கினோம்
நல்ல தலைவனை தேடியே
நாசமா நாம போகிறோம்
இவண்
ஆற்காடு குமரன்
9789814114