வாழ்க்கை வெறுத்தது வானினை நோக்கினேன்
வான்நிலவன்று வந்து நின்றது.. என் வாட்டம் தனைக் கொண்டு சென்றது.....
துள்ளி எழுந்து நடந்தேன் துணையாய் வந்தது... தள்ளி வைக்க முயன்றேன் பிறையாய் மெலிந்தது...
நட்சத்திர பட்டாளம் கண்டு நகைத்தது...
நள்ளிரவு காதலை நன்றாய் சுவைத்தது...
நீண்ட தூரம் இணையாய் நடந்தோம்...
வெக்கை தணிக்க குளத்தின் மிதந்தோம் ...
காற்று மழையில் ஒன்றாய் நனைந்தோம்
மின்னல் கீற்றின் ஒளியாய் திகழ்ந்தோம்
எனக்கென அவளும் அவளுக்கென நானும் ஆயுள் கழித்தோம்...
இடையினில் காதல் ஒன்றாய் ஒள
கொழித்தோம்
அன்று ஒரு நாள் அவள் வரவே இல்லை... அன்று முதல் நான் எழவே இல்லை
இவண்
ஆற்காடு குமரன்
9789814114