கரூர் கள நிலவரம்
சுடுகாட்டில் வைத்துக் கொள்ளுங்கள் கட்சி கூட்டங்களை
உலறல்கள் கேட்டு உறை பிணங்கள் உயிர்த்தெழக்கூடும் தன் வாக்குரிமை மீட்க
மைதானங்களில் அல்லது மயானங்களில் மாநாடு நடத்துங்கள்....
போக்குவரத்து நெரிசல் உள்ள
பொதுவெளியில் எதற்கு பொல்லாப்பு...
தியாகிகளுக்கான வீர வணக்கம் இன்றளவில் தீவட்டிகளுக்காக
திரை இறை தீராத நோயாக
தீர்க்கிறது தானாக
விளைவுகளை உணராமையால் விவேகம் அற்று போனது.. வீர உரை வீணாக ஆனது
இறுதி ஊர்வலமா இது இன்றே முகம் பார்க்க... இத்தனை கூட்டம்
சொல் புத்தியும் சுயபுத்தியும் அல்லாத அலட்சிய மனோபாவம்
அகால மரணங்கள்
அறிவு முதிர்வு அற்ற தொண்டர்களின் அலப்பறை
இதுவா பரப்புரையின் வரைமுறை
ஆணவப் பேச்சு இந்த அவலத்திற்கு வித்திட்டதாக அமைகிறது
தூர் மரணங்கள் துரித செயல்பாடுகள் துளிர்க்கின்றன சந்தேகங்கள்
தேடினாலும் அகப்படாத அரசியல்வாதிகள்... காத்திருந்து கடமையாற்றுவது
ஆடத் தெரிந்தவன் காய்களை நகர்த்துவான் ஆட தெரியாதவன் ஆட்டத்தையே கலைப்பான்
மக்களாட்சி மறு பதிவாகிறது தேர்தலை முன்னிட்டு தேடிவரும் நிவாரணங்கள்....
நீ வரணும் என்ற எதிர்பார்ப்பு நிவாரணங்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லை...
மயானத்தின் வாசலில் வெட்டியான் மருத்துவமனை வாசலில் மந்திரிகள்....
சொர்க்கவாசல் கூட்ட நெரிசல்
கள்ளக்குறிச்சி சாராயம்
கும்பமேளா கூட்ட நெரிசல்
கரூர் வாங்கிய காவு
உயிரை துச்சமென எண்ணும் தொண்டர்களை எச்சம் என காணும் தலைவர்கள்...
அவதூறு பரப்பவில்லை அறியாமையை விளக்குகிறேன்
சாமானியனுக்கும் சந்தேகம் எழுகிறது சங்கதியை தந்தியாய் பாவித்ததை குறித்து
களப்பணியாற்றுவது அறப்பணியே
மாற்றுக் கருத்து இல்லை
களப்பணியாற்றுவது கரை வேட்டிகள் விந்தையே...
அடிமைகளை ஏவி விடுவதே வாடிக்கை இங்கு அரசியல்வாதிகள் பணியாற்றுவது கேளிக்கை
பேரிடருக்கு நிகராக பெருந்துயரை தீர்த்தது பாராட்டுக்குரியதே
சந்தேகத்தையும் தீர்த்து விடுங்கள் எலும்பில்லாத நாக்கு இவர்களுக்கு
விளக்கொளியை கொண்டு வித்தை காட்டியவன் தானே...
படப்பிடிப்பு தளம் அல்ல
அரசியல் களம்.. பலிகடாக்கள் அல்ல மனித குலம்..
இவண்
ஆற்காடு குமரன்
9789814114