படியமைத்து
வடிவமைத்து
பாரம்பரியம்
பறைசாற்றி
கொலுவமைத்து கொண்டாடி
கோதையர் யாவரும் கூடி பாடி
மாதவத்திரு மங்கையர் நாடி
இறையாண்மையில் ஒன்று கூடி
கொண்டைக்கடலை
கொண்டு சமைத்து
வெண்ணைக் கண்ணனை
வேண்டி யழைத்து
தொன்னையிலிட்டு
தோழமை மதித்து
தொன்று தொட்டு
நின்று நிலைத்து
ஒன்பது நாட்கள்
ஒன்று சேர்ந்து
ஒவ்வொரு நாளும்
புதுமை சார்ந்து
பற்பல சிலைகள் பாங்குடன்
சிற்பக் கலைகளின் பங்குடன்
விகற்பம் இல்லாத விழாவிது
விரும்பி விழைந்து கொண்டாடுது
பராசக்தியின் பற்பல வடிவம்
பரம்பொருள் சிற்ப சொருபம்
அறம் பொருள் மொத்த உருவம்
வரம் தரும் சக்தியின் உறவும்
கொலு வைக்கிறோம் பாருங்க கொள்ளை அழகு காணுங்க
கொண்டாட ஒன்று கூடுங்க...
கோதையர்களின் நாளுங்க..
இவண்
ஆற்காடு குமரன்
9789814114