நுகராதிருத்தல் நன்மையே...
சிதறாதிருத்தல் மேன்மையே...
பதறாதிருத்தல் வாய்மையே
பகராதிருத்தல் தூய்மையே
நிலையாயிருத்தல் வலிமையே
நினையாதிருத்தல் வளமையே
அசையா இருப்பது ஆற்றல் அற்றது
யார் சொன்னார் அசையாதிருக்கும் கல்லே கடவுளாக
அசையாதிருப்பது சிதைவதல்ல
சிதையாதிருக்க இசையாதிரு
சலனமற்று இருத்தலே கவனச்சிதறாதிருத்தல்
உட்பொருளின்றி
ஒரு பொருளும் இல்லை
மெய்ப்பொருளறிதல்
மெய்ஞானம் ஆகும்
புருவத்தினிடையே
சர்வத்தை நிறுத்து
புத்துணர்வடைய
கர்வத்தை விடுத்து
உயிர்நிலை உணர்தல்
உயர்நிலை ஆகும்
உளவியல் அறிதல்
உணர்வியல் சேரும்
புலனடக்கம் தேவை புவியடக்கியாள
உள்ளடக்கம் தேவை
உலக மறையாக
நிம்மதி தேடி
நின்மதி நாடு
வெண்மதி கூட விலகி ஓடும்
உன் மதியே நன் நலம் நாடும்
இவண்
ஆற்காடு குமரன்
9789814114