தேநீர் அருந்தும் போது தேகத்தின் மீது வரும் அக்கறை..மது அருந்தும் போது மறந்து விடுகிறது....
சர்க்கரை குறைவாக
சத்தமாக கேட்கிறது
சரக்கை பார்த்ததும்
சத்தம் அடங்கி போகிறது
வடையில் இருக்கும் எண்ணையை பிழிந்து எடுக்கும் இவன் மதுவில் இருக்கும் போதையை பிரித்து எடுக்க வேண்டியதுதானே.....
மது தீர்ந்த குவளைகள் கூட மற்றவனுக்கு உதவுகிறது மதுவை அருந்திய இவன்....?
ஊறுகாயில் இருக்கும் உரப்பு கூட உள்ளே போகும் மதுவில் இருப்பதில்லை இன்றைய தயாரிப்பு
குடிப்பதற்கு முன்னே குழந்தையாக இருக்கும் அப்பா...குடித்த பிறகு
கொடூரமாக...
குடிப்பதற்கு முன் ஆயிரம் சுத்தம் பார்க்கிறான்... குடித்தப் பிறகு
கால்வாயில் குப்புற கிடக்கிறான்...
மதுவிற்கு மட்டும் எப்போதுமே காலாவதி திகதியில்லை... மது அருந்துபவனுக்கு காலாவதி தேதி வெகு தொலைவில் இல்லை....
வாதைக்கு வயது வரம்பு இல்லை என்பதை போலவே இன்றளவில் போதைக்கும்....
ரத்த அழுத்தத்தை சரிபார்த்துக் கொள்ளுங்கள் சர்க்கரை அளவையும் சேர்த்து எல்லா தருணங்களிலும்...
இருக்கும்போதும் இறந்த பிறகும் நம்மை சுமக்கும் மண்ணுக்கு
நோயற்ற நமது உடலே நோபல் பரிசு ஆகும்....
நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்... நோயுற்றுப் போனால்
குறை தானே யாவும்...
இவண்
ஆற்காடு குமரன்
9788814114