அரிய புகைப்படங்களை
கொண்டு அங்கலாய்த்து கொள்கிறது....
அடுத்தவனின் உயரம் உறுத்தலாக தான் தெரிகிறது... நாம் உயரவில்லையே என்று உணராமலே
ஊரை அடித்து உலையில் போட்டவன் என்று ஓலமிடுகிறது...அடிக்கும் வரை ஊர் ஏன் உறங்கிக்கொண்டிருந்தது...
ஏமாற்றிப் பிழைத்தார்கள் என்று ஏக மனதாக எல்லோரும் சொல்லிவிட முடியாது அது ஏமாந்தவர்களின்
எதிர்பார்ப்பினால் ஏற்பட்ட இழப்பு...
கொள்ளையடித்தார்கள் உண்மைதான் கொள்ளையடிக்கும் முறை நீ என் அவனுக்கே வெள்ளை அடித்துக் கொண்டிருந்தாய்...
இன்றுவரை தமிழினம் தன் மீது உள்ள தவறை ஒப்புக்கொள்ளவில்லை...
தமிழனின் பலவீனத்தை உணர்ந்தவன் மட்டும் தான் இன்றுவரை தலைவனாக இருக்கிறான்....
தமிழினமே தன் பலத்தை இன்று வரை உணரவில்லை பிறகு எப்படி மற்ற இனம் அறியும்.....
மொழியின் வரிசையில் முதல் இடத்தில் இருந்தாலும்
முயற்சியின் வரிசையில் இறுதியில் இன்று வரை....
உணர்ந்தால் தானே வெளிப்படுத்த முடியும் வெளிப்படுத்தினால் தானே மற்றவனுக்கு விளங்கும்...
வாய் பிளந்து பார்த்து பார்த்து வாய்ப்பை இழந்தவன் தானே தமிழன் யாவரும்....
வக்காலத்து வாங்கவில்லை
எவனுக்கும் நான்... வக்கற்ற உன் வரலாற்றை வழிமொழிகிறேன் நீ விழிப்புறவே...
கதை கேட்ட நாயை செருப்பால் அடி அடித்துக் கொண்டே இருக்கிறான்..
கதை கேட்டபடியே நாம்...
வந்தாரை வாழ வைத்த தமிழனமே வாழ வைத்தது போதும் வாழ வைத்த உன்னால் வாழ முடியாதா...?
நீ எப்போது வாழப் போகிறாய்..
நீ எப்போது ஆளப்போகிறாய்...
தமிழனின் ஆளுமையின் கீழ் மட்டுமே தாய் மொழியும் மேலோங்கும்...
இம்மண்ணில் பிறந்தவன் மண்ணாள வேண்டும்... அன்றில் எம் மண்ணும் நமை ஆளக்கூடும்...
சிதையாமல் இருக்க சிதறாமல் இருக்க சிந்திப்போம் இனி வரும் நாளில் சந்திப்போம்...
அங்கலாய்ப்பது என்பது அவநம்பிக்கை கொண்ட நம்மை நாமே கலாய்ப்பதற்கு சமம்....
அரிதான புகைப்படம் என்பது அடுத்தவன் புகைப்படம் அல்ல
நம்மை நாம் அறிந்தால் புலப்படும்
நம் மமதை மேலும் பலப்படும்...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114