உடல் நலம் விசாரிக்கும் உறவுகள் எதுவும் உளம் நலம் பற்றி உணர்வதில்லை....
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பொய்யோ அறியாமல் போகிறது அறிமுகம் ஆகும் உறவுகள் கூட.....
அகத்தின் அழகு முகத்தில் தெரிவதில்லை எல்லோர் முகத்திலும் முகமூடிகள்...
உளம் நலம் எப்படி உணர முடியும்... ரத்த பந்தங்கள் கூட சுத்தமாய் உணர்வதில்லை..கௌரவம் காரணம்
வெளிப்படுத்த முடிவதில்லை...
பொய் முகங்களுக்கான காரணம் பொறாமை பொச்சரிப்பும் கூட
நல்லா இருக்கிறவன் நாசமா போகணும்னு நினைக்கிற நல்ல உள்ளங்கள் நம்மிடையே....
கெட்டு போனவனை நினைக்கிறவன விட கெட்டு போகணும்னு நினைக்கிறவன் நம்மிடையே....
தள்ளி விடுவதற்கு ஆயிரம் பேர் வருவார்கள் துள்ளி எழுவதற்கு உனக்கு நீயே துணை....
நலம் விசாரிக்கா விட்டால் என்ன
பலம் பலவீனம் உணர்ந்தவனுக்கு
தூக்கி எறியும் யாவரும் உன்னை தூக்கி விடப் போவதில்லை....
நீ தூக்கி விடும் யாவரும் இறுதி வரை துணையாக வருவதில்லை..
அகம் அழகானால் முகம் அழகாகும்
அரிதாரம் பூசுவதை விட்டுவிடு அது அடையாளம் அல்ல.. ஆதங்கம் கொள்வதையும் விட்டுவிடு அது ஆக்கம் அல்ல....
நலம் விசாரிக்க பழகி விடு குலப்பண்பு அது.. நல்லெண்ணம் கொண்டு விடு நற்பண்பு அது...
இறுகும் உன் முகம் ஒரு நாள் அதுவரை என் முகத்தோடு வாழ்ந்து விடு.... உறையும் நாளில் உடலும் கரையும் அதுவரை உறுதியோடு வாழ்ந்து விடு....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114