கடந்ததை எண்ணி வருந்தாதே வருவதை எண்ணி கலங்காதே
இழந்தது எதையும் மறக்காதே.. இருப்பது எதையும் துறக்காதே...
கற்றுக் கொடுத்த பாடம் கடந்த காலம் கற்றுக் கொள்ளும் பாடம் நிகழ்காலம் நாம் கற்பிக்கும் காலம் எதிர்காலம்...
நாளை என்பது வாய்ப்பு அதற்கு ஏன் இந்த வியப்பு...
நீ கொள்ளும் பயமே உன்னை கொல்லும்...நீ செய்யும் செயலே உன்னை தள்ளும்..நீ எள்ளும் சொல்லே உன்னை எள்ளும்...
நீ உதிர்க்கும் யாவையும் விதையானால் உன் பெயர் சொல்லும்.... நீ உதிர்க்கும் யாவையும் உரமானால்.. உன் தலைமுறை வெல்லும்...
நீ உதிர்க்கும் யாவையும் விடமானால்.. விருத்தி இல்லாமல் போகக் கூடும் விரக்தி என்பது நிலையே ஆகும்
நாடி துடிக்கும் வரையிலும் உனக்குள் உன்னை தேடி அடைந்திடு... நாடி அடங்கும் முன்னே நன்றாய் உன்னை உணர்ந்திடு...
தேடி வருவது யாவையும் ஓடி விடுமே ஒரு நாள்... நீ தேடி அடையும் பொருளும் நீ வாடிக் கிடக்கையில் பிறர் நாடி இருக்க கடவே...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114