திருவோட்டுக்கும் வரி விதிக்கும் திருநாட்டில் பிறந்து விட்டோம்....
தெருவோரம் நடப்பதற்கும்
வரி கேட்கும் மறந்து விட்டோம்....
மதிப்பெண்ணில் தேர்வையும் ஓட்டு எண்ணிக்கையில் தேர்தலையும்
முடிவெடுக்கும் போதே தெரியவில்லையா நாம் முட்டாள்கள் என்று.....
பணபலம் படைபலம் இருந்தால் போதும் பதவி பலம் கூடிப் போகும் பரிபாலனம் தேடி வரும்....
தேர்தல் நிதியாக தேடி வரும் பட்ட கடன் தள்ளுபடியாக ஓடிவிடும்... முதலாளிகளுக்கு முக்கியத்துவம் முதலைகளின் அட்டூழியம்
திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி விளம்பரத்திற்கே போதவில்லை...
விளம்பரம் மட்டுமே விமோசனம் தீட்டிய திட்டம்..
பிச்சை எடுத்தானாம் பெருமாளு புடுங்கி தின்றதாம் அனுமாறு... பிச்சைக்காரனுக்கும் கட்டண கழிப்பிடம்
கட்டாயம் வரி யிடும்
கழிக்க வழியில்லை கழிப்பறைக்கு வரி
மிளிரும் இந்தியா ஒளிரும் இந்தியா அலறும் குடிமக்கள்....
ஒன்றியத்தின் இன்றியமையாத செயல்களில் ஒன்று வரிவிதிப்பு
இரண்டு பிற மதங்கள் அவமதிப்பு
மூன்று மொழிகளின் பரிதவிப்பு
ராணுவத்தையும் விட்டு வைக்கவில்லை இவர்கள் ஆணவம்.... ஆவண படுத்துங்கள் ஓய்வு பெற்ற ராணுவ வீரனே தேர்தலில் நிற்க வேண்டும்..
இளமையில் எல்லையில் நின்றவன் முதுமையிலும் வாசலில் நிற்பதும் ஏன்
எல்லை காத்தவனை மக்கள் மத்தியில் நிறுத்துங்கள்.....
அரசியலிலும் வாரிசு உரிமை
அலுவலகத்திலும் வாரிசு உரிமை இல்லாது போகும்... தகுதி அடிப்படையில் தலைவன் உருவாகக் கூடும்......
கட்சிகள் இங்கே காணாமல் போகக்கூடும்.. மதங்களை வைத்து கட்சி மாநாடு நடக்காமல் முடங்கும்....
இனங்களைக் கொண்டு ஏற்படும் இழிவுகள் இல்லாமல் போகும்
வெட்ட வெளியில் நின்றவனை நட்ட நடுவில் நிறுத்திப் பார்ப்போம்....
மூடநம்பிக்கை என்பது கூட முற்றிலும் இல்லாமல் போகும்... எதிரியை எதிர்கொள்ளும் துணிவு எல்லோருக்கும் நிலையாக கூடும்.....
வறியவனிடம் வரியை வசூலிக்கும் அரசு வல்லரசாக வாய்ப்பே இல்லை
அதிகப்படியான வரி விதிப்பே வரி ஏய்ப்புக்கும் காரணம்....
அவாளுக்கு வரியில்லை அவாள தேடிப் போனா இவாளுக்கும் வரி இல்லை...
அவாளுக்கு வேற வழி இல்ல....
இவாளுக்கு தெளிவு இல்லை....
வெங்காயத்தையே விலக்கி வைச்ச வெங்காயம்...விலை வாசி தெரியாத
விளங்காத பெரும் சாபம்...
வந்த வழியை மறந்து விட்டது வாழும் வழியில் தெளிந்து விட்டது வழிப்பறியில் பட்டம் வாங்கி விட்டது
வங்கிக் கணக்கில் இருப்பு சேர்ந்து விட்டது....
வயிற்றுக்கருவுக்கும் வரி வசூலிக்கும் நாளை.... ஆணுக்கு ஒரு சதவிகிதம் பெண்ணுக்கு ஒரு சதவிகிதம் பலவின்பாலுக்கு பல சதவிகிதம்....
பண்ணிய பாவம் புண்ணியம் சேர்க்காது எண்ணிய யாவும் இருக்கும் வரை நிறைவேறாது....
திண்ணியமாகும் கண்ணியமற்ற களவு மண் அரித்து போகும் மாயமாகும் நாளும்...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114