திரும்பிப் பார்க்கும் குணம் கொண்டவர்கள் என்று விரும்பி திரும்பி அழகில் வியந்து அருகில் விரைந்து
நிழலாய் விழைந்து அன்பில் விளைந்து
அரும்பிய காதலாலே
விரும்பிய நம் பாதையை விட்டு விலகி விடுவோம்....
இலக்கை நோக்கி பயணி இல்லை உன் விருப்பப்படி பயணி நீ அடையும்
இலக்கு நீ எதிர்பாராத அளவு நன்றாய் அமையும்.....
உன் இரு விழியும் இரு பாதங்களும் நேர்கோட்டில் அமையட்டும்.... காற்றில் மிதந்து கடக்க உன் இரு கரங்கள்
துடுப்பாக இருக்கட்டும்
விவாதங்களோ விமர்சனங்களோ
வினாக்களோ...ஒரு செவியில் நுழைந்து மறு செவியில் வெளியேறட்டும்...
ஏறு போல் நடக்க கற்றிடு வீறு கொண்டு நீயும் விரைந்திடு
பேரும் புகழும் எதிர்கொண்டு அல்ல உன் பயணம்....பேராற்றல் உன் பிறவியின் பயனும்....
வழி தேடி அலையாதே வழிகாட்டியாய் நீ இரு
விடை தேடி அலையாதே வினாக்களை நீ தொடு
விளைவுகளைப் பற்றி யோசித்து விதைகளை நீ இடு.....
ஊன்றியதால் தோன்றியதை நீ படைத்திடு... வேண்டியது ஒன்றே ஒன்றே வீரம் கலந்த விவேகம்...
சயனம் தொலையட்டும் பயணம் விளங்கட்டும்
சலனம் தவிர்த்திடு கவனம் கொண்டிடு
புலனம் நீயே... புரிந்து நீ வாழ்ந்திடு....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114