பூதவுடல் பூக்களை தூவி இறுதி அஞ்சலி செலுத்துகிறது.. நேற்றுவரை தன்னைச் சுமந்த அன்னை மண்ணுக்கு......
மனமுவந்து வழியனுப்ப வருவோரை மலர் தூவி வரவேற்கிறது.... உதித்த மலர் யாவும் ஊருக்கான நன்றி கடன்
உதிரும் மலர்கள் யாவும் கதறும் உனக்காக.... பாடை கூட உன்னை பிரிந்து உருண்டு புரண்டு வாடும்
கண்ட கண்கள் யாவும் இங்கே
கண்ணீர் கரை புரண்டு ஓடும்....
வீட்டிலிருந்தே நெருப்பு கொண்டு செல்கிறேன் விரகாய் மயானத்தில் நான் ஏரிய....
வீதிக்கு வந்த பின்னே பூக்கள் கூட புழுதியாக...கூட்டி பெருக்கும் நாளைய பிணங்கள்...
சேருமிடம் கொண்டு பார்க்கப்படுகிறது
சேரும் உன்னை தூரம் ஒதுக்கி வைக்கிறது....
எந்த இடம் சேர்ந்தாலும் நிலைப்பதில்லை எந்த நிலையும் எவனுக்கும் நிலையும் இல்லை.....
மயானத்தின் வாசலிலே மாடுகளின் அணிவகுப்பு... மலர்கள் உணவாக
மனதிற்கு இதமாக...
விதைத்தவருக்கு நன்றி விளைவித்தவளுக்கு நன்றி
விரும்பிய அனைவருக்கும் நன்றி
விடை தரும் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114