பொதுவுடைமை தளத்திலே
தனி உரிமை எதற்கடா
வாரிசு உரிமை என்பது வரலாற்று பிழையடா...
மன்னர் ஆட்சி நடக்கையில் மரபு இது தானடா... மக்களாட்சி நடக்கையிலும்
இம் மரபு நமக்கு வீணடா...
தகுதியற்ற அனைவரும் தலைவன் இங்கு தானடா... தடியெடுத்து சுழற்றினால் தலைவன் தானே நீயடா...
கொலை கொள்ளை அடித்தவன் கொடி பிடித்து நடக்கிறான்
நிதியை கொஞ்சம் சேர்த்து கிட்டா
நீதிக்கு அதிபதியாய் ஆகிறான்...
சாமியாரு சந்ததியும் சாமியாரா ஆகுறான்..சாமி கூட சம்பந்தம் பேசி
சந்தோசமா ஆடுறான்...
பரிகாரம் என்ற பெயரில் பலியாகும்
பாமரன் பரிகாரம் பலகாரம் இவனுக்கு மட்டும் உபகாரம்...
ஆன்மீகத்திலும் அடிக்கல் நாட்டும் அவதார வாரிசு உரிமை பாரடா மாரியாத்தாவுக்கும் இவன் மரபுக்கும் என்ன உறவு கேளடா.....
கல்லு கிட்ட தன் தேவை சொல்ல
கையாலாகாதவன் இல்லையே
கையாளும் கைங்கரியும் கொண்ட
கலையை கற்றவன் தானுங்க
தேவை என்று வந்து நிற்கும் உன்னால் அவன் தேவை தீர்ந்து போகுங்க
மண்ணில் நீ வாழும் வரை உன்னில் கடவுள் காணுங்க....
வாரிசு உரிமை கொள்வதாலே பல பரம்பரை தரிசு நிலமாய் இருக்குது
வாரிசு உரிமை முன்னுரிமையாலே
பலரின் வாய்ப்பு இங்கே முடங்குது
பொது தளத்தில் வேண்டாம் இந்த பொழப்பு.... பொறுத்தது போதும் பொங்கி எழு நீயும் பிழைக்க..
உடன்கட்டை ஏற மறுக்கும் உன் வாரிசு உன் கட்டை வேகும் முன் ஆக்கிடும் உன்னை தரிசு...
மக்களாட்சி மண்ணிலே பிறந்தவன் யாவரும் மன்னரே.... மனசாட்சியுடன் நடந்து கொள்... மண்ணில் சாட்சியாகும் உன் இனமே...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114