கரும்பலகையில் இருட்டு
கல்விச்சாலைகள் பூட்டு
நிலையற்ற காற்றில்
அலைக்கற்றை கல்வி
தொற்றுக்கு பயந்து தொடர்ந்து தனிமைப்பட்டு கிடக்கிறது வகுப்பறைகள்....
தண்டவாளங்கள் தனிமைப்படுத்தப்பட்டு
தொற்றுக்கு பயந்து
நிலவும் கதிரும் கூட தொடும் தூரத்தில் இல்லை
தொற்றுக்கு பயந்து
சமூக ஏற்றத்தாழ்வு இன்றி
சமூகம் முழுதிலும் பரவிய
கொரோனா........ சமூகப் பரவல் இல்லை.......
அம்மாவை வழி அனுப்பிவிட்டு அம்மா வழியில் ஆட்சி
அம்மா உணவகம் சாட்சி
டிஜிட்டல் இந்தியா
டிஜிட்டல் தனியாரிடம் இருந்து பெற்ற வார்த்தையோ.......
தாரை வார்த்துக் கொடுக்கப்படும் அரசுத் துறைகளுக்கு பின் மாறுமோ டிஜிட்டல் இந்தியா....
கூறுபோட்டு விற்க துவங்கிவிட்டது கூட்டம்
பங்குச்சந்தை
பலியாடுகள் நாம்...
கொரானா கொள்ளை
கொள்ளையரின் கொள்ளை
முடங்கிக் கிடக்கிறோம்
மூடர்களாய்
படையெடுத்து வர வேண்டாம் எதிரிகள் பணம் எடுத்து வந்தால் போதும்..,.....
விற்று தீர்த்துவிட்டு
விலகும் முன்
விழித்திடுவோம்
விலைபோகாதிருப்போம்
எல்லாம் மூடிக்கொண்டிருக்கிறது
அரசு ஆடிக்கொண்டிருக்கிறது
வாடி நிற்காமல்
கூடி நிற்போம்
நமக்கு நாமே என்று.....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114