கடந்த வாரம் வெளியூர் பயணம்
என்னைக் காணாது காலாவதியாகி பூக்களெல்லாம் துணையெனை
காணாது துவண்டு போயின
தொட்டவுடன் துவண்டு மடியில் விழுந்தன..... இதழ்களை மூடிக் கொண்டு விரிக்க மறந்தன....
மலர்ந்த மலர்கள் எல்லாம் மனதை கவர்ந்தன உதிர்ந்த மலர்கள் எல்லாம்
உள்ளத்தை உருக்குலைத்தன
பாதம் படாத பாதைகளெல்லாம் புற்கள் முளைத்தன... பாதம் பட்டதும் புற்க்கள் முறைத்தன....
வேர்கள் எல்லாம் என்னை காணாது வெம்பி துடித்தன...... மண்ணில் விரிசல் விட்டு... என் விழிகளில் கண்ணீர் துளிர்த்தன.....
மழை வந்த காரணம் மகன் சொன்னான்
ஆயிரம் தான் பால் இருந்தாலும் தாய்ப்பாலுக்கு ஈடாகுமா.....
நீர் ஊற்றி முடித்தேன் சேறுறித்திளைத்தன
வாயூறி மகிழ்ந்தன....
பூக்கள் மட்டுமல்ல இலைகளும் சருகாகி உலர்ந்து உதிர்ந்தன..... உடல் மெலிந்தன பராமரிப்பு இல்லாவிட்டால் பாவம் செடிகள் மட்டுமல்ல.....
புற்கள் மட்டும் புலம்பிக் கொண்டிருந்தன என் பாதம் பட்ட பாவம் பட்டுப் போவோம் என்று
வண்டுகள் பல வலம் வந்தாலும்
வாசம் வீசினாலும் நேசம் கொண்டவன் நெருங்க வில்லை என்றால்
வாடிப் போகும் பூக்களெல்லாம்....
தினமும் தரிசனம் தீஞ்சுவை காதலில்
அதுவே கரிசனம் தேன் சுவை தேடலில்
காதல் கொள்வீர் இயற்கை மீது
காலத்தை வெல்வீர் ஈடு ஏது
என் கைபிடித்து உடன்வர கால்கள் இல்லையே என்று கண்ணீர் விட்டன மரங்கள்...... வேர் பிடித்து நின்றதால் வேறு இடம் பிரழ முடியவில்லை
கார் மழை பொய்த்துப் போகும் உன் கைப்பிடி நீர் மெய்யாகும்... யார் ஊற்றினாலும் தீரவில்லை தாகம்
நீ நீரூற்றிடு அதுவே நிம்மதி ஆகும்
அசைந்தாடும் பூக்களை அள்ளி அணைத்துக் கொண்டேன் இசைந்து என்னுடன் இணைந்தது அதன் தாகம் தணிந்தது.....
வேறு இடம் போக மாட்டேன்
வேர் நீ இருக்க கிளைபரப்பி அழைக்க வேண்டாம் இலை உதிர்ந்து நசிய வேண்டாம்...
இணையாக நான் இருப்பேன் உன் துணையாக நான் இருப்பேன்.....
பிணையாக நான் இருப்பேன்....
பிரியாத காதலாலே.....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114