காரணம் நானெனவே
காயப்படுகிறேன் வடுவின் தடமென வாழ்ந்து விடுகிறேன்....
எழுதாத கவிதையாக தொலைந்து விடுகிறேன்... எண்ணம் போல் வாழ்க்கை என ஏற்றுக் கொள்கிறேன்
ஒரு வழியில் பயணப்படும் இருப்பு பாதையாய்... நினைவு பெட்டகம் தான் சுமந்து தேய்ந்து போகிறேன்
இணையாகச் செல்லும் அது இணையாது நாளும் அது
சுமையாக உணராது அது
சுகமான பயணம் இது
தடம் மாறும் தருணத்தில் குடை சாயக் கூடும்..தடுமாறி நிலைமாறி தடம் புரளலாகும்....
கொய்திடவே மனமின்றி
கொய்யாமல் ரசித்தேன் நான்
வாசம் வந்து நாசி தீண்ட... சுவாசம் வழி நேசம் தூண்ட...
காணாத தூரத்தில் இடைக்காற்று நம் சஞ்சாரத்தில்... வாடாது வாழ்ந்திடுவோம் வாசம்தனை நுகர்ந்தே....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114