மது குடித்து இறந்தவனுக்கு மானியம் இங்கே கிடைக்குது
மதக் கூட்ட நெரிசலில் இறந்தவனுக்கு மனமிரங்க மறுக்குது
கள்ளச்சாராயம் குடித்தவனுக்கு இழப்பீடு குடுக்குது கடவுளைத் தேடிச் சென்றவனுக்கு கல்லறையில் இடம் கிடைக்குது
இல்லாத ஒன்றை தேடிச் சென்றால் இல்லாமல் தானே நீயும் போவாய்
இன்பத்தை தேடி நீயும் மறைந்தால் துன்பத்தை தானே துணையாய் அடைவாய்
காம களியாட்டத்தில் நீயும் திளைத்தால் காலப்போக்கில் கட்டுடல் இளைப்பாய்
சாமியார் இங்கே தலைமறைவானார் சாட்சி சொல்ல யார் சாமி வருவார்
சாராயம் என்ற பெயரை கேட்டால் சரண் அடைந்து போகுது.... சாமி பார்க்க போன ஆசாமிய சாமி சாமி ஆக்க முயலுது
இரண்டும் இறப்பு ஒரு வகை இழப்பு
எடுத்து உரைக்கிறேன் இரண்டின் சிறப்பு
நீயே கடவுள் என்று உணர்ந்தால் நிச்சயம் அலைச்சல் இல்லையே
நின் வினையே விளை பலன்
என்று உணர்ந்தால்
பரிகாரங்கள் தேவையில்லையே
பறித்து பழித்து உண்ணுதலும்
பாவ வினை தானடா
சாப விமோசனம் தேடடா
பாவம் புண்ணியம் ஏதுமில்லை பண்புடன் நீயும் வாழடா...
ஒவ்வாமை என்று ஏதுமில்லை ஒழுக்கத்துடன் நீ வாழிடவே...
இடுக்கண் என்றும் இல்லையே உன் அகக்கண் திறத்தல் நன்மையே
இவண்
ஆற்காடு குமரன்
9789814114